/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விசைத்தறி கூலி விவகாரம் கணபதி பூஜை ஒத்திவைப்பு
/
விசைத்தறி கூலி விவகாரம் கணபதி பூஜை ஒத்திவைப்பு
ADDED : பிப் 19, 2024 06:27 AM
பொதட்டூர்பேட்டை: பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி உள்ளிட்ட தாலுகாவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள், நெசவு தொழில் செய்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, கூலி உயர்வு குறித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நடப்பு ஆண்டும் கூலி விவகாரம் குறித்த பேச்சு பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதட்டூர்பேட்டையில் வசிக்கும் நெசவாளர்கள் இன்று விசைத்தறி கூடங்களில் கணபதி பூஜை நடத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
ஆனால், கூலி உயர்வு குறித்த விவகாரத்தில் தீர்வு கிடைக்கும் வரையில், தற்போது வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருவதால், இன்று நடத்துவதாக இருந்த கணபதி பூஜையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். நேற்று காலை பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் நடந்த நெசவாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

