/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூனிமாங்காடு - திருவாலங்காடு அரசு பேருந்து இயக்கப்படுமா?
/
பூனிமாங்காடு - திருவாலங்காடு அரசு பேருந்து இயக்கப்படுமா?
பூனிமாங்காடு - திருவாலங்காடு அரசு பேருந்து இயக்கப்படுமா?
பூனிமாங்காடு - திருவாலங்காடு அரசு பேருந்து இயக்கப்படுமா?
ADDED : செப் 26, 2024 06:11 AM
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியத்தில் பூனிமாங்காடு, நல்லாட்டூர், அரும்பாக்கம், நெமிலி, மாமண்டூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த பகுதியினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு திருவாலங்காடு செல்ல வேண்டியுள்ளது. இங்கிருந்து திருவாலங்காடுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
திருவாலங்காடு செல்ல தடம் எண்: 97 என்ற அரசு பேருந்து- திருத்தணி -- நாராயணபுரம் கூட்ரோடு வழியாக, திருவள்ளூர் செல்லும். இந்த ஒரேயொரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது.
அதற்கும் எங்கள் கிராமத்தில் இருந்து, 6 -- 10 கி.மீ., துாரம் ஆட்டோ அல்லது இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு, சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து செல்லும் அவலநிலை உள்ளது.
எனவே, பூனிமாங்காடு -- திருவாலங்காடுக்குபேருந்து இயக்கும் பட்சத்தில், 30 கிராம மக்கள் பேருந்து சேவை பெற முடியும். இது தொடர்பாக, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

