/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பஸ் நிலையத்தில் மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பிய போலீஸ்காரர்
/
பஸ் நிலையத்தில் மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பிய போலீஸ்காரர்
பஸ் நிலையத்தில் மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பிய போலீஸ்காரர்
பஸ் நிலையத்தில் மாணவர்கள் பள்ளிக்கு அனுப்பிய போலீஸ்காரர்
ADDED : டிச 17, 2025 06:48 AM

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பிளஸ் 2 வரை, 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். தாராட்சி, பேரண்டூர், பாலவாக்கம், தண்டலம், போந்தவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் ஏராளமானோர் பள்ளிக்கு வருகின்றனர்.
அரசு பேருந்து மூலம் ஊத்துக்கோட்டை வரும் மாணவர்கள் சிலர், பள்ளிக்கு செல்லாமல் இலவச பாஸ் மூலம் மீண்டும் பேருந்தில் பயணிப்பது, பேருந்து நிலையத்தில் கூட்டமாக சுற்றித் திரிவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று பேருந்து நிலையத்தில் சில மாணவர்கள், பேருந்தில் ஏறுவது, இறங்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் அமீர், மாணவர்களிடம் விசாரித்தார். பின், அனைத்து மாணவர்களையும் பள்ளிக்கு அழைத்து சென்றார். இதை பார்த்த பொதுமக்கள், போலீஸ்காரரின் செயலை பாராட்டினர்.