/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்பில் சிக்கிய அரசு நிலம் மீட்க திருமழிசை மக்கள் கோரிக்கை
/
ஆக்கிரமிப்பில் சிக்கிய அரசு நிலம் மீட்க திருமழிசை மக்கள் கோரிக்கை
ஆக்கிரமிப்பில் சிக்கிய அரசு நிலம் மீட்க திருமழிசை மக்கள் கோரிக்கை
ஆக்கிரமிப்பில் சிக்கிய அரசு நிலம் மீட்க திருமழிசை மக்கள் கோரிக்கை
ADDED : டிச 20, 2025 05:50 AM
திருமழிசை: திருமழிசையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு நிலத்தை மீட்க வேண்டுமென, அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருமழிசை பேரூராட்சி பேருந்து நிலையம் எதிரே, சர்வே எண்: 90 - 6ல் 40 சென்ட் நிலம் உள்ளது.
இந்த நிலத்தை ஆக்கிரமித்து, வணிக நிறுவனங்கள் மற்றும் விவசாயம் செய்யும் பணி நடந்து வருகிறது. அதேபோல், மேட்டுதாங்கல் பகுதியில் உள்ள சர்வே எண்: 17ல், கெங்கையம்மன் கோவில் குளம் உள்ளது. இந்த குளத்தை ஆக்கிரமித்து 17 வீடுகள் உள்ளன.
இந்த இரு இடங்களையும் மீட்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் சார்பில், கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, திருமழிசை வருவாய் துறை அலுவலர் கூறியதாவது:
திருமழிசை பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்த புகார் வந்துள்ளது. உடனே ஆக்கிரமிப்பு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, எல்லை கற்கள் அமைக்கப்படும்.
கெங்கையம்மன் கோவில் குளம் ஆக்கிரமிக்கப்பட்டு, 17 வீடுகள் கட்டப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
அதில், 40 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருவதாகவும், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு பின், நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

