/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை சிரமத்தில் பிளேஸ்பாளையம் மக்கள்
/
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை சிரமத்தில் பிளேஸ்பாளையம் மக்கள்
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை சிரமத்தில் பிளேஸ்பாளையம் மக்கள்
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை சிரமத்தில் பிளேஸ்பாளையம் மக்கள்
ADDED : டிச 18, 2025 06:42 AM

திருவள்ளூர்: பிளேஸ்பாளையம் கால்நடை மருத்துவமனைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், கிராம மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் வட்டம் பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது பிளேஸ்பாளையம் ஊராட்சி.
இந்த ஊராட்சிக்கு உட்பட்டு பிளேஸ்புரம், அடிசன்புரம், இருளர், அருந்ததியர், செங்குளி கண்டிகை, பிளேஸ்பாளையம் காலனி மற்றும் நரியன்கோனை ஆகிய குக்கிராமங்கள் அமைந்து உள்ளன.
இந்த ஊராட்சியில், 2,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பிளேஸ்பாளையம், ஆந்திர - தமிழக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிப்போரில் பெரும்பாலானோர், ஆடு, மாடு, கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க, பிளேஸ்பாளையம் கிராமத்தில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு செல்லும் சாலை சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது.
சாலையில் மலைகற்கள் உள்ளதால், கால்நடைகளுடன் செல்லும் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும், கால்நடை மருத்துவமனையும் உரிய பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளது. எனவே, பூண்டி ஒன்றிய நிர்வாகம், கால்நடை மருத்துவமனையை புனரமைக்க வேண்டும். மேலும், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

