/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒரே இடத்தில் மற்றொரு மதுக்கடை அனுமதிக்க கும்மிடி மக்கள் எதிர்ப்பு
/
ஒரே இடத்தில் மற்றொரு மதுக்கடை அனுமதிக்க கும்மிடி மக்கள் எதிர்ப்பு
ஒரே இடத்தில் மற்றொரு மதுக்கடை அனுமதிக்க கும்மிடி மக்கள் எதிர்ப்பு
ஒரே இடத்தில் மற்றொரு மதுக்கடை அனுமதிக்க கும்மிடி மக்கள் எதிர்ப்பு
ADDED : செப் 18, 2024 09:09 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி தாமரை ஏரிக்கரையோரம், குடியிருப்பு பகுதிகள் அருகே இரு அரசு மதுக்கடைகள் (எண்:8758, 9111) இயங்கி வந்தன. இதனால் அப்பகுதியில் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பங்கள் அதிகரித்து, சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக, கடந்தாண்டு ஜூன் மாதம், தமிழகம் முழுதும் அடைக்கப்பட்ட, 500 கடைகளில் ஒன்றாக, மேற்கண்ட இரு கடைகளில் ஒன்றை (எண்: 9111) அரசு மூடியது. இருப்பினும், மற்றொரு கடையையும் அகற்ற வேண்டும் என, கும்மிடிப்பூண்டி பகுதிவாசிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தேர்வழி கிராமத்தில் கிராம மக்களுக்கு இடையூறாக இயங்கி வரும் அரசு மதுக்கடை (எண்: 9110) அகற்ற வேண்டும் என, மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
அந்த கடையை அகற்றி விட்டு, கும்மிடிப்பூண்டி ஏரிக்கரையோரம் இடம் மாற்றும் பணி நடப்பதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். சமூக விரோத செயல்கள் அதிகரிப்பால், கடை மூடப்பட்ட பகுதியில் மீண்டும் டாஸ்மாக் வருவதை அறிந்த பகுதிவாசிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஏற்கனவே, இங்குள்ள கடையை அகற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்து வரும் நிலையில், புதிதாக ஒரு கடையை கொண்டு வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருப்பதாக மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
எனவே, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, கும்மிடிப்பூண்டி தாமரை ஏரிக்கரையோரம் புதிதாக வரும் மதுக்கடையை அனுமதிக்க கூடாது. தற்போது இயங்கி வரும் மதுக்கடையையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

