/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செடிகள் வளர்ந்து பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம்
/
செடிகள் வளர்ந்து பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம்
செடிகள் வளர்ந்து பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம்
செடிகள் வளர்ந்து பராமரிப்பில்லாத விளையாட்டு மைதானம்
ADDED : டிச 22, 2025 05:20 AM

கொண்டஞ்சேரி: கொண்டஞ்சேரி பகுதி யில் செடிகள் வளர்ந்துள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட் பட்டது கொண்டஞ்சேரி ஊராட்சி. இங்குள்ள பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, கடந்த 2014ம் ஆண்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இந்த மைதானத்தை இப்பகுதியைச் சேர்ந்த குழந்தை கள் மாலை நேரங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த விளையாட்டு மைதானம் தற்போது செடிகள் வளர்ந்து விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து வீணாகியுள்ளது, இதனால் குழந்தைகள் பயன்படுத்த முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஒன்றிய அதிகாரிகள் இந்த விளையாட்டு மைதானத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.