/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.45 மதிப்பில் புதிய நுாலகம் திறப்பு
/
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.45 மதிப்பில் புதிய நுாலகம் திறப்பு
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.45 மதிப்பில் புதிய நுாலகம் திறப்பு
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.45 மதிப்பில் புதிய நுாலகம் திறப்பு
ADDED : அக் 19, 2024 12:49 AM

திருவள்ளூர்:''பள்ளி கல்வித்துறை உத்தரவின்படி, நுாறு நுாலகங்களில் முதல் நுாலகமாக திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் திறக்கப்பட்டு உள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டரும் பின்பற்ற வேண்டும்,'' என அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
கலைஞர் நுாற்றாண்டு விழா முன்னிட்டு, பொதுமக்கள் கூடும் இடங்களில், 100 நுாலகம் அமைக்கப்படும் என, பள்ளிக் கல்வி துறை ஆணை பிறப்பித்தது. இதன்படி தமிழகத்திலேயே முதல் நுாலகம் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் 45 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு உள்ளது. 'ஏசி' வசதியுடன், பசுமையான சூழலில் நுால்களை வாசிக்கும் வகையில் இருக்கை வசதியுடன் கூடிய நுாலக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் பிரபுசங்கர் முன்னிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் நுாலகத்தை நேற்று திறந்து வைத்து கூறியதாவது:
பொதுமக்கள் கூடும் இடங்களில் 100 நுாலகம் அமைக்க அரசாணை வெளியிட்ட நிலையில், முதல் நுாலகமாக திருவள்ளூரில் நவீன நுாலகம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு, 3,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இதே போல், தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்களும் இது போன்ற நுாலக பூங்கா உருவாக்கி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர், திருவள்ளூர் காங்., எம்.பி., சசிகாந்த் செந்தில், எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

