ADDED : செப் 14, 2025 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநின்றவூர்:திருநின்றவூர், ஈசா ஏரியில் அழுகிய ஆண் சடலம் மிதப்பதாக, போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. போலீசாரின் விசாரணையில், இறந்து கிடந்தது திருவள்ளூர் மாவட்டம், பெருமாள்பட்டு பகுதியைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் தேவேந்திரன், 37, என்பதும், இறந்து நான்கு நாட்களானதும் தெரிய வந்தது.
சென்னை சாஸ்திரி பவனில் குடியுரிமை பிரிவில் இளநிலை அதிகாரியாக பணிபுரிந்த இவர், கடந்த 5ம் தேதி முதல் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். கடந்த 9ம் தேதி வெளியே சென்றவர், அதன்பின் வீடு திரும்பவில்லை.
சம்பவத்தன்று, தேவேந்திரன் மதுபோதையில் ஏரியில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.