/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
/
முனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஏப் 20, 2025 07:29 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரம் கிராமத்தில் முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. இதற்கான யாகசாலை பூஜை, கடந்த வியாழக்கிழமை துவங்கியது.
இதையொட்டி, பாலாபுரம், மகன்காளிகாபுரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட நுாற்றுக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். தொடர்ந்து, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன. நேற்று காலை 9:30 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கலச புறப்பாடு துவங்கியது.
காலை 10:15 மணிக்கு கோவில் கோபுரம் மற்றும் பிரமாண்ட முனீஸ்வரர் சிலைக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், பாலாபுரம், மகன்காளிகாபுரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

