/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பால் மாயமாகி வரும் கருமான் குளம்
/
ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பால் மாயமாகி வரும் கருமான் குளம்
ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பால் மாயமாகி வரும் கருமான் குளம்
ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கலப்பால் மாயமாகி வரும் கருமான் குளம்
ADDED : ஜூலை 21, 2025 03:27 AM

நேமம்:பராமரிப்பில்லாமல் செடி, கொடிகள் வளர்ந்தும், ஆக்கிரமிப்பு மற்றும் கழிவுநீர் கலந்தும் கருமான் குளம் மாயமாகி வருகிறது.
வெள்ளவேடு அருகே நேமம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கிருந்து குத்தம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலையோரம் ஊராட்சிக்கு சொந்தமான கருமான் குளம் உள்ளது. இந்த குளத்து நீரை பகுதிமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
குளத்தின் கரை பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி குடியிருப்புகளாக மாறியுள்ளன. மேலும், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குளத்தில் விடப்படுகிறது. இதனால், கழிவுநீர் குளமாக மாறியுள்ளது.
மேலும், கருமான் குளத்திற்கு வரும் நீர்வரத்து கால்வாய் பராமரிப்பு இல்லாததால், நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செடி, கொடிகள் வளர்ந்து, கழிவுநீர் கலந்து ஏற்படும் துர்நாற்றத்தால், பகுதிமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்
எனவே, கருமான் குளத்தை ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வரத்து கால்வாய் மற்றும் குளத்தை சீரமைக்க வேண்டுமென, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.