/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கல்லுாரி இடையிலான தடகளம் டி.ஜி., வைஷ்ணவ் 'சாம்பியன்'
/
கல்லுாரி இடையிலான தடகளம் டி.ஜி., வைஷ்ணவ் 'சாம்பியன்'
கல்லுாரி இடையிலான தடகளம் டி.ஜி., வைஷ்ணவ் 'சாம்பியன்'
கல்லுாரி இடையிலான தடகளம் டி.ஜி., வைஷ்ணவ் 'சாம்பியன்'
ADDED : பிப் 13, 2024 11:29 PM
சென்னை:கல்லுாரிகளுக்கு இடையிலான தடகள போட்டியில், அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவ் அணி ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தை வென்றது.
அன்னை வயலட் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி, பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில், 100 மீ., முதல் 1,500 மீ., 5,000 மீ., 10,000 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், வட்டு ஏறிதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளத்தின் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டியில், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லுாரி அணிகள் பங்கேற்றன. அனைத்து போட்டிகளின் முடிவில், அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவ் கல்லுாரி அணி, மொத்தம் ஒன்பது தங்கம், மூன்று வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அடுத்த இடத்தை, டி.பி., ஜெயின் கல்லுாரி அணியினர் கைப்பற்றினர்.