/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் முதல் நாள் மனு தாக்கல் இல்லை
/
திருவள்ளூரில் முதல் நாள் மனு தாக்கல் இல்லை
ADDED : மார் 20, 2024 09:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கிய நிலையில், யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
திருவள்ளூர் லோக்சபா தொகுதி தேர்தல், ஏப்., 19ல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் நேற்று துவங்கி, வரும் 27 வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று, வேட்பு மனு பெற கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
கலெக்டர் அலுவலகத்திற்குள் வருவோர் மற்றும் வாகனங்களை போலீசார் தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே அனுமதித்தனர். வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான நேற்று, யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

