/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆவடியில் எலி கடித்த அழுகிய பழங்களில் 'பிரஷ் ஜூஸ்' வாடிக்கையாளரின் அதிரடியால் கடைக்கு 'சீல்'

ADDED : செப் 09, 2025 10:54 PM
ஆவடி:எலி கடித்த அழுகிய பழங்களில் ஜூஸ் தயாரித்து விற்பனை செய்த கடைக்கு, வீடியோ ஆதாரத்துடன் வாடிக்கையாளர் வெளியிட்ட வீடியோவால், 'சீல்' வைக்கப்பட்டது.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சி.டி.எச்., சாலையில் 'நயாகரா' என்ற பெயரில் பிரபல பிரஷ் ஜூஸ் கடை செயல்பட்டு வந்தது. கடந்த 6ம் தேதி காலை, திருமுல்லைவாயில், நேதாஜி நகரைச் சேர்ந்த விக்கி, 30, என்பவர், குடும்பத்துடன் அங்கு சென்று மாதுளை பழச்சாறு அருந்தியுள்ளார்.
அப்போது, அதில் அழுகிய துர்நாற்றம் வீசியது. இது குறித்து, கடை ஊழியர்களிடம் கேட்டபோது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்தனர். அதிர்ச்சி அடைந்த விக்கி, கடையில் வைக்கப்பட்டு இருந்த பழங்களை பார்த்தபோது, அவை, எலி கடிக்கப்பட்ட நிலையிலும், அழுகிய நிலையிலும் இருந்தன.
மேலும் கடை வளாகம் சுகாதாரமற்று படுமோசமாக இருந்தது.
இது குறித்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார். அவர், மீட்டிங்கில் இருப்பதாக கூறி அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி வேலவன் தலைமையிலான அதிகாரிகள் பிரஷ் ஜூஸ் கடைக்கு சென்று, நேற்று கடைக்கு 'சீல்' வைத்தனர்.