/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாழடைந்த ரயில்வே குடியிருப்பில் மனித எலும்புக்கூடால் பரபரப்பு
/
பாழடைந்த ரயில்வே குடியிருப்பில் மனித எலும்புக்கூடால் பரபரப்பு
பாழடைந்த ரயில்வே குடியிருப்பில் மனித எலும்புக்கூடால் பரபரப்பு
பாழடைந்த ரயில்வே குடியிருப்பில் மனித எலும்புக்கூடால் பரபரப்பு
ADDED : டிச 21, 2025 05:28 AM

திருத்தணி: திரு த்தணி ரயில் நிலையம் அருகே பழுதடைந்த ரயில்வே குடியிருப்பு ஒன்றில், நேற்று மனித எலும்புக்கூடை போலீசார் மீட்டனர்.
திருத்தணி ரயில் நிலையம் அருகே, ரயில்வே ஊழியர்கள் தங்குவதற்கு, 15க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ரயில்வே நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், நான்கு குடியிருப்புகள் சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தன. இதனால், இந்த குடியிருப்புகளில் ஊழியர்கள் யாரும் தங்கவில்லை.
நேற்று காலை சேதமடைந்த குடியிருப்பு பகுதிக்கு இளைஞர்கள் சிலர் சென்றனர். அப்போது, ஒரு குடியிருப்பில் மனித எலும்புக்கூடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து, திருத்தணி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தி ருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எலும்புக்கூடை மீட்டனர். மேலும், இறந்தவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது மயங்கி விழுந்து இறந்தாரா என, பல்வேறு கோணங்களில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து, திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன் கூறியதாவது:
திருத்தணி ரயில்வே குடியிருப்பில் மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டது. இவர், எட்டு மாதங்களுக்கு முன் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எலும்புக்கூடு அருகே ஒரு லுங்கியும், ஆண் அணியும் செருப்பும் இருந்ததால், இறந்தவர் ஆணாக இருக்கலாம். எலும்புக்கூடை ஆய்வு செய்த பின், இறந்தவர் குறித்த விபரம் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

