/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடிப்பூண்டியில் மிக கனமழை இயல்பு வாழ்க்கை முடங்கியது
/
கும்மிடிப்பூண்டியில் மிக கனமழை இயல்பு வாழ்க்கை முடங்கியது
கும்மிடிப்பூண்டியில் மிக கனமழை இயல்பு வாழ்க்கை முடங்கியது
கும்மிடிப்பூண்டியில் மிக கனமழை இயல்பு வாழ்க்கை முடங்கியது
ADDED : டிச 13, 2024 02:26 AM

கும்மிடிப்பூண்டி,:கும்மிடிப்பூண்டி பகுதியில் மிக கனமழை பகல் முழுதும் தொடர்ந்தது. இடைவெளி விட்டு கொட்டி தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.
கும்மிடிப்பூண்டி அடுத்த, ஓபுளாபுரம் பகுதியில், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதை ஒட்டியுள்ள இணைப்பு சாலையில் குளம் போல் மழைவெள்ளம் சூழ்ந்தது. அதனால், வாகனங்கள் அனைத்தும் மிதந்தபடி சென்றன. இருசக்கரம், கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்கள் மழை வெள்ளத்தில் சிக்கி கொண்டு திணறின.
அதேபோன்று, கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில், கவரைப்பேட்டை, தச்சூர் ஆகிய பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் இணைப்பு சாலையில் மழை வெள்ளம் சூழ்ந்தது.
கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் தேங்கி இருந்த கழிவுநீர் நிரம்பி வழிந்து மழைநீருடன் கலந்து, ஜி.என்.டி., சாலையில் ஆறாக பாய்ந்தது. நுர்நாற்றம் ஒருபுறம், மழை வெள்ளம் மறுபுறம் என, வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், ஜி.என்.டி., சாலையோர வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.

