/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நன்னீர் இறால் பண்ணை பதிவு செய்வது கட்டாயம்
/
நன்னீர் இறால் பண்ணை பதிவு செய்வது கட்டாயம்
ADDED : மார் 05, 2024 08:59 PM
திருவள்ளூர்:நன்னீர் இறால் பண்ணைகளை பதிவு செய்ய, விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் கட்டுப்பாட்டிற்கு வெளியில் உள்ள பகுதிகளில் நன்னீரில் இயங்கி வரும் பி.வன்னமை இறால் பண்ணைகளை வரன்முறைப்படுத்தி பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் வழிகாட்டு நெறிமுறை அரசால் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி வன்னமை இறால் வளர்ப்பு பண்ணைகள் பதிவு செய்தல், உரிமம் புதுப்பித்தல், கண்காணித்தல் மற்றும் முறைபடுத்துதல் தொடர்பாக கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட அளவிலான குழு நியமனம் செய்யப்பட்டு, பதிவு மேற்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில், பதிவு பெறாமல் இயங்கி வரும் நன்னீரில் இயங்கும் வன்னமை இறால் பண்ணை உரிமையாளர்கள், உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேண்பாக்கம், பொன்னேரி, 044 -27972457 என்ற அலுவலகத்தை தொடர்பு கொண்டு, விண்ணப்பத்தை வழங்க வேண்டும். தவறினால், பண்ணை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

