/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் 25 நாட்களுக்கு பின் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்
/
பழவேற்காடில் 25 நாட்களுக்கு பின் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்
பழவேற்காடில் 25 நாட்களுக்கு பின் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்
பழவேற்காடில் 25 நாட்களுக்கு பின் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள்
ADDED : டிச 22, 2025 04:32 AM
பழவேற்காடு: 'டிட்வா' புயல் எச்சரிக்கை, தொடர்ந்து கனமழை, கடல் சீற்றம் உள்ளிட்டவைகளால், 25 நாட்களாக மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்த மீனவர்கள், நேற்று தொழிலுக்கு சென்றனர்.
பழவேற்காடு மீனவப் பகுதியில், 56 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்களின் பிரதான தொழில் கடலில் மீன்பிடிப்பதாகும்.
கடந்த மாதம், 23ல் வங்க கடலில் 'டிட்வா' புயல் உருவாகியதை தொடர்ந்து, மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என, மீன்வளத் துறை அறிவுறுத்தியது.
மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்தனர். 'டிட்வா' புயல் கடந்த மாதம், 29ல் கரையை கடக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இம்மாதம், 4ம் தேதி வரை நீடித்து கனமழை பொழிந்தது.
அதன் பின்னரும், கடல் சீற்றமாகவே இருந்ததால், மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்திருந்தனர்.
தற்போது கடல் சீற்றம் குறைந்து உள்ள நிலையில், 25 நாட்களுக்கு பின், நேற்று மீனவர்கள் தொழிலுக்கு சென்றனர். கட்லா, கானாங்கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன.