/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை விபத்தில் தொழிற்சாலை ஊழியர் பலி
/
சாலை விபத்தில் தொழிற்சாலை ஊழியர் பலி
ADDED : செப் 14, 2025 02:52 AM
திருத்தணி:பைக் மீது கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா கீழாந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 55. இவர், ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பணி முடித்து, 'ஸ்பிளன்டர் பிளஸ்' பைக்கில் வீட்டிற்கு வந்துக் கொண்டிருந்தார். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி அடுத்த பொன்பாடி சோதனைச்சாவடி அருகே வந்தபோது, ஆந்திர மாநிலம் நோக்கி அதிவேகமாக சென்ற கார் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த குமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.