/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரு லாரிகள் மோதி விபத்து போராடி மீட்கப்பட்ட டிரைவர்
/
இரு லாரிகள் மோதி விபத்து போராடி மீட்கப்பட்ட டிரைவர்
இரு லாரிகள் மோதி விபத்து போராடி மீட்கப்பட்ட டிரைவர்
இரு லாரிகள் மோதி விபத்து போராடி மீட்கப்பட்ட டிரைவர்
ADDED : ஏப் 05, 2025 02:40 AM

கும்மிடிப்பூண்டி:சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று, நேற்று அதிகாலை சென்றுக் கொண்டிருந்தது. சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் மேம்பாலத்தில் சென்ற போது, பழுதாகி நின்றுக் கொண்டிருந்த நிலக்கரி லோடு லாரியின் பின்னால் மோதியது.
இந்த விபத்தில் உருக்குலைந்த கன்டெய்னர் லாரியின் ஓட்டுனர், ராஜாஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுவிபால், 45, என்பவரின் இரு கால்களும் லாரிகளுக்கு இடையே சிக்கியது.
தகவல் அறிந்து வந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், படுகாயங்களுடன் ஓட்டுனரை மீட்டு, கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

