/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'லாபம் இல்லா திட்டத்தை திணிக்க வேண்டாம்' கூட்டுறவு பணியாளர் சங்கம் எதிர்ப்பு
/
'லாபம் இல்லா திட்டத்தை திணிக்க வேண்டாம்' கூட்டுறவு பணியாளர் சங்கம் எதிர்ப்பு
'லாபம் இல்லா திட்டத்தை திணிக்க வேண்டாம்' கூட்டுறவு பணியாளர் சங்கம் எதிர்ப்பு
'லாபம் இல்லா திட்டத்தை திணிக்க வேண்டாம்' கூட்டுறவு பணியாளர் சங்கம் எதிர்ப்பு
ADDED : நவ 13, 2024 02:04 AM

திருவள்ளூர்:'லாபம் இல்லாத முதல்வர் மருந்தகம், இயந்திரம் வாடகை திட்டம் போன்றவற்றை திணிக்க வேண்டாம்' என வலியுறுத்தி, கூட்டுறவு பணியாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டுறவு இணைப் பதிவாளரிடம் அளித்துள்ள மனு:
தமிழகம் முழுதும், 4,350 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் 150க்கும் மேற்பட்ட நகர கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில், 20,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடை இயங்கி வருகின்றன.
சங்கத்தின் வாயிலாக, உறுப்பினர்களுக்கு பயிர், தொழிற்கடன், விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட சேவை வழங்கப்படுகிறது. பொது வினியோக திட்டத்தை செயல்படுத்த ஏற்படும் செலவினத்திற்கு, தற்போது வரை வழங்கிய மானிய தொகை, சில ஆண்டுகளாக வழங்கவில்லை.
இதனால், சங்க பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில், தற்போது டிராக்டர், நெல் அறுவடை இயந்திரங்களை வாடகைக்கு விடவும், முதல்வர் மருந்துகம் ஆகிய லாபம் வராத திட்டங்களை அமல்படுத்த கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறான திட்டங்களை பயன்படுத்த வாய்ப்பு இல்லாத நிலையில், மேலும் அதிகளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சங்கத்திற்கு லாபம் இல்லாத திட்டங்களை கட்டாயப்படுத்தி அனுமதிப்பதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

