/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் குவிந்த பக்தர்கள்: 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
/
திருத்தணியில் குவிந்த பக்தர்கள்: 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணியில் குவிந்த பக்தர்கள்: 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருத்தணியில் குவிந்த பக்தர்கள்: 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ADDED : டிச 22, 2025 05:19 AM

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. அதிகாலை, 3:00 மணியளவில் பக்தர்கள் குவிந்ததால் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை, 2:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
மார்கழி மாதம் என்பதால் அதிகாலை, 3:00 மணிக்கு தனுர் மாத பூஜையுடன் மூலவரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
நேற்று கடும் பனிப்பொழி இருந்த போதிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.
இதனால், பக்தர்கள் பொதுவழியில் மூலவரை தரிசிக்க, இரண்டு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இரவு, 7:00 மணிக்கு உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.