/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாந்தீஸ்வரர் பூஜையில் இட நெருக்கடி தனி மண்டபம் அமைக்க கோரிக்கை
/
மாந்தீஸ்வரர் பூஜையில் இட நெருக்கடி தனி மண்டபம் அமைக்க கோரிக்கை
மாந்தீஸ்வரர் பூஜையில் இட நெருக்கடி தனி மண்டபம் அமைக்க கோரிக்கை
மாந்தீஸ்வரர் பூஜையில் இட நெருக்கடி தனி மண்டபம் அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 27, 2024 08:07 PM
திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது.
இந்த கோவிலுக்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு தமிழக மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து ஒரு நாளைக்கு 2,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலில், 2010ம் ஆண்டு முதல் சனிக்கிழமை தோறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடந்து வருகிறது. இந்த பூஜையில், காலை 8 -- 12 மணி வரையில் மூன்று குழுக்களாக 200 பக்தர்கள் வரையில் பூஜையில் பங்கேற்று வருகின்றனர்.
தற்போது பரிகார பூஜை முதல் திருச்சுற்று மாளிகையில் நடைப்பெறுகிறது. இங்கு பக்தர்கள் அமர்ந்து பரிகாரம் செய்ய இட நெருக்கடி உள்ளதால், பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே மாந்தீஸ்வரர் பரிகார பூஜையை கோவில் வளாகத்தில் மாற்று இடத்தில் மண்டபம் அமைத்து நடத்த திருத்தணி கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.