/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் கூடுதலாக 4 ரயில் நிறுத்தம் வழங்க முடிவு
/
திருவள்ளூரில் கூடுதலாக 4 ரயில் நிறுத்தம் வழங்க முடிவு
திருவள்ளூரில் கூடுதலாக 4 ரயில் நிறுத்தம் வழங்க முடிவு
திருவள்ளூரில் கூடுதலாக 4 ரயில் நிறுத்தம் வழங்க முடிவு
ADDED : டிச 18, 2025 06:37 AM
சென்னை: திருவள்ளூரில் கூடுதலாக நான்கு விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
சென்னைக்கு அடுத்த புறநகரில் முக்கிய ரயில் நிலையமாக, திருவள்ளூர் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து, தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னைக்கு வந்து செல்கின்றனர். இந்த வழித்தடத்தில் தினமும், 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் கடந்து செல்கின்றன.
ஆனால், பெரும்பாலான விரைவு ரயில்கள் நின்று செல்வதில்லை. இதனால், விரைவு ரயில்களின் சேவையை பெற முடியாமல், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். கூடுதல் விரைவு ரயில்கள் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கோரி, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ரயில் பயணியர்கள், தெற்கு ரயில்வேக்கு தொடர்நது வலியுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
திருவள்ளூர் ரயில் நிலையம் தற்போது, மங்களூரு மெயில், ஆலப்புழா, காவேரி, திருப்பதி, மும்பை, ஏலகிரி, மைசூரு உட்பட பல விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன.
மேலும், திருவள்ளூர் வழியாக கேரளா, கர்நாடகாவுக்கு செல்லும் விரைவு ரயில்களில், நான்கு விரைவு ரயில்களுக்கு நிறுத்தம் வழங்கப்பட உள்ளது. இதற்கான, அறிவிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

