/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் மீனவர்களுக்கு களிநண்டு வளர்ப்பு பயிற்சி
/
பழவேற்காடில் மீனவர்களுக்கு களிநண்டு வளர்ப்பு பயிற்சி
பழவேற்காடில் மீனவர்களுக்கு களிநண்டு வளர்ப்பு பயிற்சி
பழவேற்காடில் மீனவர்களுக்கு களிநண்டு வளர்ப்பு பயிற்சி
ADDED : டிச 15, 2024 10:56 PM
பழவேற்காடு:தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலை பயிற்சி நிறுவனத்தின் சார்பில், பழவேற்காடு பண்ணை ஆராய்ச்சி மைதயத்தில், பிரதம மந்திரி மீன்வளம் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மீனவர்களுக்கு களிநண்டு வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், களிநண்டு வளர்ப்பு, தொழில்நுட்பங்கள், நண்டுகளில் கொழுப்பு ஏற்றுதல், விதை நண்டு உற்பத்தி, சந்தைப்படுத்துதல் குறித்து மீனவர்களுக்கு விளக்கமான பயிற்சி வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் மற்றும் பதிவாளர் முனைவர் சிதம்பரம் பயிற்சி முகாமை துவக்கி வைத்து, சீரான வருவாய் ஈட்டுவதற்கு களிநண்டு வளர்ப்பில் ஈடுபடும்படி மீனவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
உதவி பேராசிரியர் வேல்முருகன், மத்திய, மாநில அரசுகளின் மீனவர் நலத் திட்டங்கள் குறித்தும், அதை எவ்வாறு பயனடைவது என்பது குறித்தும் விளக்கமளித்தார்.
களிநண்டுகளின் வகைகள், வளர்ப்பு முறைகள் குறித்து உதவி பேராசிரியர் முனைவர் செல்வராஜ் பயிற்சி அளித்தார். நண்டு வளர்ப்பில் பொருளாதார முக்கியத்துவம் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து உதவி பேராசிரியர் முனைவர் சுருளிவேல் பேசினார்.
இந்த பயிற்சி முகாமில், குளத்துமேடு, ஜமீலாபாத் கிராமங்களைச் சேர்ந்த, 70க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்று, களிநண்டு வளர்ப்பு தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு தீர்வு பெற்றனர்.

