/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடில் மணல் திட்டுக்களில் ஓய்வெடுக்கும் வர்ணநாரைகள்
/
பழவேற்காடில் மணல் திட்டுக்களில் ஓய்வெடுக்கும் வர்ணநாரைகள்
பழவேற்காடில் மணல் திட்டுக்களில் ஓய்வெடுக்கும் வர்ணநாரைகள்
பழவேற்காடில் மணல் திட்டுக்களில் ஓய்வெடுக்கும் வர்ணநாரைகள்
ADDED : டிச 14, 2025 06:26 AM

பழவேற்காடு:பழவேற்காடு சரணாலயப்பகுதியில், வர்ணநாரைகள் கூட்டம் கூட்டமாக அங்குள்ள மணல் திட்டுகளில் இரைதேடலுக்கு பின் ஓய்வெடுத்து வருகின்றன.
பழவேற்காடு சரணலாயத்தில், கூழைக்கடா, கடல்பொந்தா, பூநாரை, வர்ணநாரை, சாம்பல்நிற நாரை என, பல்வேறு வகையான பறவையினங்கள் உள்ளன.
ஆண்டுதோறும், டிசம்பர் மாத இறுதியில் துவங்கி, ஏப்ரல் மாதம் இனப்பெருக்கம் மற்றும் இரைதேடி இங்கு வருகின்றன.
தற்போது அதற்கான சீசன் துவங்கி உள்ளநிலையில், கூழைக்கடா, வர்ணநாரை உள்ளிட்ட சில பறவையினங்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக இரைதேடி சுற்றித்திரிகின்றன.
இதில் அதிகளவில் வர்ணநாரைகள் உள்ளன. இரைதேடலுக்கு பின், அங்குள்ள மணல் திட்டுகளில் ஓய்வெடுத்து வருகின்றன.
இவை பழவேற்காடு பகுதிக்கு செல்லும் சுற்றுலாப்பயணியர் மற்றும் மீனவர்களை பரவசப்படுத்துகின்றன.
ஜனவரி மாத இறுதியில், பிளம்பிங்கோ, கடல்பறவை உள்ளிட்ட பல்பவேறு வகையான பறவைகள் அதிகளவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.