/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிழற்குடையில் புகுந்த கார் பள்ளிப்பட்டில் பரபரப்பு
/
நிழற்குடையில் புகுந்த கார் பள்ளிப்பட்டில் பரபரப்பு
நிழற்குடையில் புகுந்த கார் பள்ளிப்பட்டில் பரபரப்பு
நிழற்குடையில் புகுந்த கார் பள்ளிப்பட்டில் பரபரப்பு
ADDED : ஏப் 10, 2025 02:34 AM

பள்ளிப்பட்டு:ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில், சாமிநாயுடுகண்டிகை கூட்டுச்சாலையில் நிழற்குடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு, இந்த வழியாக பள்ளிப்பட்டு நோக்கி சென்ற 'மாருதி ஈக்கோ' கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் உள்ள பயணியர் நிழற்குடையில் புகுந்தது.
இதில், நிழற்குடையின் வடக்கு பகுதியில் இருந்த சுவர் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. காரின் முன்பக்கம் நொறுங்கியது. விபத்தில் சிக்கியவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர்.
நேற்று மாலை வரை அந்த கார் அங்கிருந்து அகற்றப்படவில்லை. இதுகுறித்து போலீசாருக்கும் எந்தவித புகாரும் வரவில்லை. இதனால், விபத்தில் சிக்கயவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள், என்ன ஆனார்கள் என்ற விபரம் தெரியவில்லை.
இந்நிலையில், மாநில நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தத்தில் மூன்று பக்க சுவர்களுடன் அபாய நிலையில் நீடிக்கும் பயணியர் நிழற்குடையை விரைந்து இடித்து அகற்ற, ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

