/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்வரத்து கால்வாயில் அடைப்பு மழைநீர் சேகரிப்பதில் சிக்கல்
/
நீர்வரத்து கால்வாயில் அடைப்பு மழைநீர் சேகரிப்பதில் சிக்கல்
நீர்வரத்து கால்வாயில் அடைப்பு மழைநீர் சேகரிப்பதில் சிக்கல்
நீர்வரத்து கால்வாயில் அடைப்பு மழைநீர் சேகரிப்பதில் சிக்கல்
ADDED : ஜூலை 27, 2025 12:16 AM

பொன்னேரி:வேளூரில் நீர்வரத்து கால்வாயை பராமரிக்காததால், செடிகள் வளர்ந்து, குப்பை கழிவுகள் சேர்ந்து, அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஏரிக்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மீஞ்சூர் ஒன்றியம், வேளூர் கிராமத்தில் உள்ள பாசன ஏரிக்கு மழைநீர் செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் குறுக்கே, வேளூர் - ரெட்டிப்பாளையம் சாலையில் உள்ள பாலம் பராமரிப்பு இன்றி உள்ளது.
பாலத்தின் கீழ் பகுதியின் இருபுறமும் செடிகள் வளர்ந்துள்ளன. குப்பை கழிவுகளால், மழைநீர் செல்லும் பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில், வேலுார் ஏரிக்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல, பாலம் முழுதும் சேதமடைந்து பலவீனமாகி வருகிறது. நீர்வரத்து கால்வாய் மற்றும் பாலம் பராமரிக்கப்படாமல் இருப்பது, கிராம மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, 'மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, நீர்வரத்து கால்வாயை தூர்வாரி பராமரிக்க வேண்டும்; பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

