/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் குப்பை குவியல் துர்நாற்றத்தால் கடும் அவஸ்தை
/
சாலையோரம் குப்பை குவியல் துர்நாற்றத்தால் கடும் அவஸ்தை
சாலையோரம் குப்பை குவியல் துர்நாற்றத்தால் கடும் அவஸ்தை
சாலையோரம் குப்பை குவியல் துர்நாற்றத்தால் கடும் அவஸ்தை
ADDED : மே 01, 2025 01:37 AM

வெங்கத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில், தினமும் இரண்டு டன் குப்பை வரை சேகரமாகி வருகிறது. ஊராட்சிக்குட்பட்ட கன்னியம்மன் நகர் பகுதியில், அரசு நிலத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், எட்டு ஆண்டுகளுக்கு முன் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், 24 லட்சம் மதிப்பீட்டில் உரக்கிடங்கு அமைக்கப்பட்டது.
இதற்கு, அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, திடக்கழிவு மேலாண்மை திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதனால், ஊராட்சியில் சேகரமாகும் குப்பை, ஊத்துக்கோட்டை - திருமழிசை நெடுஞ்சாலையோரம் உள்ள அரசு நிலத்தில் குவித்து வைக்கப்பட்டு, லாரி வாயிலாக கொடுங்கையூர் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சியுடன் வெங்கத்துார் ஊராட்சி இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து, ஒரு மாதமாக நெடுஞ்சாலையோரம் குப்பை அகற்றப்படாமல் மலைபோல் குவிந்து வருகிறது.
இதனால், ஏற்படும் துர்நாற்றத்தால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையோரம் குவிந்து வரும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

