/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து நிறுத்தம் இல்லாததால் 3 கி.மீ., நடந்து செல்லும் அவலம்
/
பேருந்து நிறுத்தம் இல்லாததால் 3 கி.மீ., நடந்து செல்லும் அவலம்
பேருந்து நிறுத்தம் இல்லாததால் 3 கி.மீ., நடந்து செல்லும் அவலம்
பேருந்து நிறுத்தம் இல்லாததால் 3 கி.மீ., நடந்து செல்லும் அவலம்
ADDED : அக் 01, 2024 06:53 PM
கனகம்மாசத்திரம்:சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது காந்தி கிராமம். இங்கு, இருளர் இனத்தை சேர்ந்த 800க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றன.
இந்த கிராமவாசிகள் பேருந்து வாயிலாக சென்னை, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
காந்தி கிராமத்தில் பேருந்து நிறுத்தம் இல்லாததால், 3 கி.மீ., தூரமுள்ள புதூர் அல்லது ராமஞ்சேரியில் இறங்கி, அங்கிருந்து நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பள்ளி செல்லும் மாணவர்கள் நடந்து சென்று வர சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக, உடல்சோர்வு ஏற்பட்டு, பள்ளியில் பாடங்களை சரியாக கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், முதியவர்கள் மற்றும் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
எனவே, திருத்தணி --- திருவள்ளூர் வரை இயக்கப்படும் தடம் எண்: 97 என்ற அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துக்களை, காந்தி கிராமத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.