/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மும்முனை சந்திப்பில் வேகத்தடை அமையுமா?
/
மும்முனை சந்திப்பில் வேகத்தடை அமையுமா?
ADDED : மே 22, 2024 05:38 AM

திருவள்ளூர் : திருவள்ளூர் ராஜம்பாள் பூங்கா அருகில் மூன்று சாலை சந்திக்கும் இடத்தில் ஏற்படும் விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை, செங்குன்றம் பகுதியில் இருந்து, திருத்தணி, திருப்பதி செல்லும் வாகனங்கள் அனைத்தும் திருவள்ளூர் சி.வி.நாயுடு சாலையை பயன்படுத்தி வருகின்றன.
காமராஜர் சிலையில் இருந்து ஒன்றரை கி.மீட்டர் துாரத்தில் சாலையின் இடதுபுறம் நகரின் பிரதான மார்க்கெட் செல்லும் சாலையான, நேதாஜி சாலை சந்திப்பு உள்ளது.
தனியார் தியேட்டர் எதிரில் உள்ள இந்த இடத்தில், சி.வி.நாயுடு சாலை-திருத்தணி சாலை மற்றும் நேதாஜி சாலை ஆகிய மூன்று வழியில் வரும் வாகனங்கள் சந்திக்கும் இடமாக உள்ளது.
இதனால், சி.வி.நாயுடு சாலையில் எதிரெதிரே வரும் வாகனங்கள், நேதாஜி சாலையில் இருந்து வரும் வாகனங்களால் அடிக்கடி மோதி விபத்திற்குள்ளாகி வருகின்றன. மேலும், திருவள்ளூரில் இருந்து திருத்தணி மற்றும் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் வரும் வாகனங்கள், இம்முனை சந்திப்பில் அதிவேகமாக வருவதால், நேதாஜி சாலை வழியாக வரும் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.
எனவே, போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை தவிர்க்க மூன்று சாலை சந்திக்கும் இடத்தில், நெடுஞ்சாலை துறையினர், வேகத்தடை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

