/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டூ - வீலர் வாங்கி தராததால் மாடியில் இருந்து குதித்தவர் பலி
/
டூ - வீலர் வாங்கி தராததால் மாடியில் இருந்து குதித்தவர் பலி
டூ - வீலர் வாங்கி தராததால் மாடியில் இருந்து குதித்தவர் பலி
டூ - வீலர் வாங்கி தராததால் மாடியில் இருந்து குதித்தவர் பலி
ADDED : ஏப் 07, 2024 12:53 AM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு கன்னியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ரோகித் குமார், 21. இவர், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இவர், புதிதாக இருசக்கர வாகனம் வாங்கி தரும்படி, தன் தாயிடம் பல மாதங்களாக கேட்டு வந்துள்ளார். இதையடுத்து, ரோகித்குமார் வேலைக்கு செல்லாமல் இருந்ததால், அவரது தாய் வாங்கி கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், மனம் உடைந்த ரோகித் குமார், மதுபோதையில் நேற்று முன்தினம் வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் தலை, கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.
l அதேபோல, காயரம்பேடு தங்கப்பாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் ஏழுமலை, 45. இவருக்கு உயர் ரத்த அழுத்த நோய் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது. நேற்று திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். தகவல் அறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

