/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
லாரிகள் வேலை நிறுத்தம் காஸ் தட்டுப்பாடு அபாயம்
/
லாரிகள் வேலை நிறுத்தம் காஸ் தட்டுப்பாடு அபாயம்
ADDED : மார் 27, 2024 10:50 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின், சிலிண்டர்களின் காஸ் நிரப்பும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கிருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களுக்கு காஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்படுகிறது. தினசரி, 100 லாரிகளில், 35,000 காஸ் சிலிண்டர்கள் ஏற்றி செல்லப்படுகின்றன.
இந்நிலையில், நேற்று லாரிவாடகை உயர்த்தி தரக் கோரி, அதன் உரிமையாளர்கள் சார்பில் வேலை நிறுத்தம் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. லாரி உரிமையாளர்களிடம் தொழிற்சாலை நிர்வாகத்தினர் பேச்சு நடத்தி வருகின்றனர்.
இதனால், மேற்கண்ட ஆறு மாவட்டங்களில், காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

