ADDED : மார் 30, 2024 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவேற்காடு:திருவேற்காடு, அயனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நாசர், 19; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 28ம் தேதி இரவு, வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றார்.
அப்போது, பைக்கில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, 25, சக்தி, 24, மற்றும் கிஷோர் குமார், 20, மூவரும், நாசரிடம் கத்திமுனையில் 1,000 ரூபாய் பறித்து சென்றனர்.
இது குறித்து விசாரித்த திருவேற்காடு போலீசார், மூவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர்.

