/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆர்.டி.ஐ., மூலம் தகவல் பெற விண்ணப்பித்தவர் அலைக்கழிப்பு
/
ஆர்.டி.ஐ., மூலம் தகவல் பெற விண்ணப்பித்தவர் அலைக்கழிப்பு
ஆர்.டி.ஐ., மூலம் தகவல் பெற விண்ணப்பித்தவர் அலைக்கழிப்பு
ஆர்.டி.ஐ., மூலம் தகவல் பெற விண்ணப்பித்தவர் அலைக்கழிப்பு
ADDED : மே 22, 2024 03:38 AM
திருவள்ளூர் : திருவாலங்காடு சார்-பதிவாளர் அலுவலகத்தில் தகவல் பெற வேண்டிய விண்ணப்பத்தை பொன்னேரி சார்- பதிவாளர் அலுவலகத்துக்கு மாவட்ட பதிவாளர் மாற்றி அனுப்பிய சம்பவம் நகைப்புள்ளாகி உள்ளது.
சென்னை, போரூரைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட காவேரிராஜபுரம் கிராமத்தில் நில அளவை தொடர்பாக, சில தகவல் கேட்டு, ஆர்.டி.ஐ., மூலம் கடந்த 2ம் தேதி விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பத்தை பெற்ற திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலக, பொதுத்தகவல் அதிகாரி, விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட திருவாலங்காடு சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பாமல், பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இச் செயல் நகைப்புள்ளாகி உள்ளது.
இதுகுறித்து, செந்தில்குமார் கூறியதாவது:
திருவாலங்காடு ஒன்றியத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சம்பந்தமே இல்லாமல், பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு தகவல் அளிக்க உத்தரவிட்டு, அதன் நகல் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட சார் பதிவாளர் அலுவலகம் முறையாக செயல்படுகிறதா என சந்தேகம் ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

