/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயில் முன் நின்றவர் படுகாயத்துடன் மீட்பு
/
ரயில் முன் நின்றவர் படுகாயத்துடன் மீட்பு
ADDED : ஆக 19, 2024 11:20 PM
பொன்னேரி: பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில், நேற்று காலை, 7:00மணிக்கு, சென்னை சென்ட்ரல் செல்லும் புறநகர் ரயில் வந்து நின்றது. பயணியரை ஏற்றிக்கொண்டு ரயில் புறப்பட்டபோது, வாலிபர் ஒருவர் திடீரென தண்டவாளத்தின் குறுக்கே சென்று தற்கொலைக்கு முயன்றார்.
ரயில் அவர் மீது மோதி நின்றது. இதில், வாலிபருக்கு காது மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது., மேல் சிகிச்சைக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜோதீஸ்வரன், 24, என்பது தெரிந்தது.

