/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட கட்டடம் திறப்பு விழா காணாமலே பாழடைந்தது
/
ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட கட்டடம் திறப்பு விழா காணாமலே பாழடைந்தது
ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட கட்டடம் திறப்பு விழா காணாமலே பாழடைந்தது
ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட கட்டடம் திறப்பு விழா காணாமலே பாழடைந்தது
ADDED : ஏப் 08, 2024 07:17 AM

சென்னை : திருமுல்லைவாயில், ஆரிக்கம்பேடு பிரதான சாலை, அனுக்கிரஹம் நகரில், புழல் ஏரியையொட்டி, ஒன்பது ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் வாயிலாக, போலீஸ் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
இங்கு, 2.50 கோடி ரூபாய் மதிப்பில், நான்கு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட்டன. ஒவ்வொன்றிலும், 10 குடும்பங்கள் வசிக்க முடியும்.
ஆனால், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், இந்த கட்டடங்கள் இதுவரை திறப்பு விழா காணாமல், வீணடிக்கப்பட்டு பாழடைந்துள்ளன. புழல் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் இந்த கட்டடம் கட்டப்பட்டதால், முறையான அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அப்படி என்றால், விதிமீறி 2.50 கோடி ரூபாய் செலவில் இந்த கட்டடம் கட்டும் வரை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாதது ஏன், விதிமீறல் எனத்தெரிந்தும் திட்டமிடலின்றி கட்டடம் கட்டி, 2.50 கோடி ரூபாய் வரிப்பணம் வீணாக காரணமானோர் யார், யார் என, உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
தற்போது, இந்த கட்டடம், 'குடி'மகன்களின் கூடாரமாக மாறி, சட்டவிரோத செயல்கள் அரங்கேறுகின்றன. 'கைவிடப்பட்டுள்ள அந்த கட்டடங்களை புதுப்பித்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு பயன்படுத்த அரசு பரிசீலிக்க வேண்டும்' என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

