/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடாரண்யேஸ்வரர் கோவிலில் விடுதி வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
வடாரண்யேஸ்வரர் கோவிலில் விடுதி வசதி ஏற்படுத்த கோரிக்கை
வடாரண்யேஸ்வரர் கோவிலில் விடுதி வசதி ஏற்படுத்த கோரிக்கை
வடாரண்யேஸ்வரர் கோவிலில் விடுதி வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : மார் 31, 2024 12:48 AM

திருவாலங்காடு:திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர், வெளியூர்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
முக்கிய விழா நாட்களான, பங்குனி உத்திரம், ஆருத்ரா தரிசனம் போன்ற நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர்.
வாரந்தோறும் சனிக்கிழமை நடக்கும் மாந்தீஸ்வரர் பூஜையில் பக்தர்கள் பங்கேற்பர்.
அவ்வாறு வரும் பக்தர்கள் தங்குவதற்கு கோவில் சார்பில் குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி வசதி இல்லை. இதனால், வெளியூர் பக்தர்கள் தனியார் தங்கும் விடுதியில் அதிக பணம் செலவழித்து தங்கவேண்டி உள்ளது.
ஏழை, எளியவர்கள் இரவில் தங்க முடியாமல் தரிசனம் முடிந்ததும் புறப்பட்டு சென்று விடுகின்றனர்.
பக்தர்களின் நலன் கருதி வடாரண்யேஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட இடத்தில், குளியல் அறை வசதியுடன் கூடிய விடுதி கட்டடம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
l வடாரண்யேஸ்வரர் கோவில் கோசாலையில் 40க்கும் மேற்பட்ட பசுக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் பக்தர்களிடம் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தங்கள் நிலங்களில் விளைந்த கோரைப்புல்லை அறுவடை செய்து வியாபாரம் செய்கின்றனர்.
இவர்கள் 20 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் புல் கட்டுகளை வாங்கி பசுக்களுக்கு வழங்குகின்றனர்.

