/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி தபால் நிலைய இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு
/
கும்மிடி தபால் நிலைய இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு
கும்மிடி தபால் நிலைய இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு
கும்மிடி தபால் நிலைய இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பு
ADDED : மே 22, 2024 04:06 AM

கும்மிடிப்பூண்டி,: கும்மிடிப்பூண்டியில், ஆங்கிலேயர் காலத்தில் தபால் நிலையம் ஏற்படுத்தப்பட்டது. 80 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள அந்த தபால் நிலையம், கும்மிடிப்பூண்டி நகரின் பல பகுதியில் உள்ள வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.
தற்போது, ஜி.என்.டி., சாலையில், சரண்யா நகர் பகுதியில், தனியார் கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில், வாடகையில் இயங்கி வருகிறது. கும்மிடிப்பூண்டியில் தபால் நிலையத்திற்கு சொந்தமாக, 1,046 சதுர அடி நிலம் உள்ளது. பஜார் பகுதியின் மத்தியில், ஜி.என்.டி., சாலை ஓரம், ரெட்டம்பேடு சாலை சந்திப்பில் உள்ள அந்த இடம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்தது.
இந்நிலையில், தபால் துறையின் தாம்பரம் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அமுதா தலைமையில் நேற்று தபால் நிலைய இடம் மீட்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி தலைமையிலான வருவாய் துறையினர் இடத்தை அளந்து கொடுத்தனர். கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையிலான போலீசாரின் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு சுவர், ஜே.சி.பி., கொண்டு இடித்து அகற்றப்பட்டது.
பின் தபால் நிலைய இடத்தை கண்டறியும் விதமாக எல்லை கற்கள் நடப்பட்டன. தபால் துறைக்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

