/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரம்பூரில் ஓய்வு அதிகாரி வீட்டில் 'ரெய்டு' 'டெண்டர்' முறைகேடு வழக்கில் நடவடிக்கை சத்தீஸ்கரின் 'டெண்டர்' முறைகேடு வழக்கில் நடவடிக்கை

ADDED : ஏப் 09, 2024 06:43 AM
சென்னை: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக, சென்னையில் ஓய்வு பெற்ற கனிம வளத்துறை அதிகாரி வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் பல மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர்.
புளியந்தோப்பு, பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மனைவி சாந்தி மற்றும் இரு மகன்களுடன் வசிப்பவர் இளவரசன், 65. இவர், சத்தீஸ்கர் மாநிலத்தில், கனிம வளத்துறையில் பொது மேலாளராக பணியாற்றி, 2019ல் ஓய்வு பெற்றார்.
இவரது பணிக்காலத்தில், மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கு 'டெண்டர்' விட்டத்தில் பல கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளது.
இது குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த நிலையில், நேற்று காலை 7:00 மணியளவில், சி.பி.ஐ., அதிகாரிகள் ஆறு பேர், இளவரசன் வீட்டில் புகுந்து ஒரு இடம் விடாமல் சோதனையில் ஈடுபட்டனர். வெளியே நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு கார்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
அதன்பின், மதியம் 1:30 மணியளவில், இளவரசன் மற்றும் இவரது மனைவி சாந்தி ஆகியோரை காரில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.