/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தபால் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் திறப்பு
/
தபால் அலுவலகத்தில் ஆதார் சேவை மையம் திறப்பு
ADDED : ஏப் 10, 2024 09:22 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் தலைமை தபால் அலுவலகத்தில், புதுப்பிக்கப்பட்ட ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தில், ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. மக்களின் வசதிக்காக, பிரத்யேகமாக தனி அறையில், ஆதார் சேவை மையம் புதுப்பிக்கப்பட்டது.
இந்த மைய துவக்க விழா, திருவள்ளூர் உட்கோட்ட கண்காணிப்பாளர் முரளிதரன், அஞ்சல் ஆய்வாளர் அருண் ராஜ்குமார், தலைமை அஞ்சல் அதிகாரி மீனா குமாரி முன்னிலையில் நேற்று நடந்தது.
விழாவில், காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தலைமை வகித்தார்.
அவர் கூறுகையில், 'திங்கள் முதல் சனி வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 8:00- மாலை 5:00 மணி வரை இந்த மையம் செயல்படும். இங்கு, ஆதார் புதிய பதிவு, திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெற்று பயன்பெறலாம்' என்றார்.

