sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கண்காணிப்பு இல்லை: குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

/

கண்காணிப்பு இல்லை: குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கண்காணிப்பு இல்லை: குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

கண்காணிப்பு இல்லை: குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்


ADDED : ஏப் 01, 2024 11:05 PM

Google News

ADDED : ஏப் 01, 2024 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்னேரி: பொன்னேரி அடுத்த வன்னிப்பாக்கம், சிறுவாக்கம் கிராமங்களில், கொசஸ்தலை ஆற்றில், 47 ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அத்திப்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் அனுப்பம்பட்டு கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, 103 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது.

மேற்கண்ட, 103 கிராமங்களுக்கு தினமும், 22.50 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, மேற்கண்ட கிராமங்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

தட்டுப்பாடை போக்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மற்றும் தேர்வாய் கண்டிகையில் குடிநீர் கொண்டுவருவது தொடர்பாக திட்டப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஆற்றின் கரையோரங்களில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் உரிய கண்காணிப்பு இன்றி கிடக்கிறது.

குழாய்கள் உடைந்து, குடிநீர் நாள் முழுதும் வீணாகி வருகிறது. மின்சார பெட்டிகள் மற்றும் குழாய்கள் உடைத்து எடுத்து செல்லப்படுகின்றன.

உரிய பராமரிப்பு இன்றி கிடப்பதால் கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு மேலும் அதிகரிக்கிறது. உடனடியாக சிறுவாக்கம், வன்னிப்பாக்கம் பகுதிகளில் குடிநீர் வாரிய அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, உடைப்புகளை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

l கடம்பத்துார் ஒன்றித்துக்குட்பட்டது திருப்பந்தியூர் ஊராட்சி. இங்கிருந்து பண்ணுார் செல்லும் நெடுஞ்சாலையோரம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் செல்லும் குழாய் உள்ளது.

இந்த குழாய் கடந்த சில தினங்களுக்கு உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்

சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து சேதமடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

l கடம்பத்துார் ஒன்றியம் போளிவாக்கம் ஊராட்சிக்குட்பட்டது போளிவாக்கம் சத்திரம். இங்கு பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் குடியிருப்பு பகுதியில் ஆழ்துளை கிணறுடன் கூடிய சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

இந்த குடிநீர் தொட்டி நீரை இப்பகுதிவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குடிநீர் தொட்டி கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பில்லாதாதல் குடிநீர் வெளியே வரும் பகுதியில் அமைக்கப்பட்டு குழாய் பகுதி சேதமடைந்துள்ளது. சீரமைக்க வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us