/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் பல்லக்கில் முருகன் உலா
/
திருத்தணி கோவிலில் பல்லக்கில் முருகன் உலா
ADDED : ஏப் 18, 2024 11:11 PM

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் சித்தரை மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மேலும் தினமும் அதிகாலையில் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில்,நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பல்லக்கு சேவையிலும், இரவு, 7:00 மணிக்கு வெள்ளி நாக வாகனத்திலும் உற்சவர் எழுந்தருளி தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்று காலையில் புலி வாகனத்திலும், இரவு, யானை வாகனத்திலும், 20ம் தேதி இரவு திருத்தேரிலும் உற்சவர் முருகப்பெருமான் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரும், 21 ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் சேர்மன் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.

