/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ராமஞ்சேரியில் எரியாத உயர்கோபுர மின்விளக்கு
/
ராமஞ்சேரியில் எரியாத உயர்கோபுர மின்விளக்கு
ADDED : ஏப் 05, 2024 12:19 AM

திருவாலங்காடு:பூண்டி --- ராமஞ்சேரி மாநில நெடுஞ்சாலை வழியாக தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திருவள்ளூர், திருத்தணி, கனகம்மாசத்திரம், திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இச்சாலையில் முக்கிய சந்திப்பாக ராமஞ்சேரி உள்ளது. எனவே ராமஞ்சேரி பஞ்சாயத்து அலுவலகம் எதிரே உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு கடந்த இரு மாதமாக எரிவதில்லை. இதனால் அந்த பகுதி கும்மிருட்டாக காணப்படுகிறது. இதனால் நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே இந்த பகுதியில் எரியாமல் உள்ள விளக்கை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது.

