/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு 'சீல்'
/
குட்கா பதுக்கி வைத்திருந்த கடைக்கு 'சீல்'
ADDED : மே 25, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த தாழவேடு காலனி பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருத்தணி எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 45 என்பவர் தன் பெட்டிக் கடையில், குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைக்கு போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் சீல் வைத்து, 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.
*****

