/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

ADDED : ஏப் 03, 2024 11:29 PM

பொன்னேரி, பொன்னேரி அடுத்த கம்மவார்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளியின் கட்டடம் சேதமடைந்ததை தொடர்ந்து, கடந்த 2022ல், சி.எஸ்.ஆர்., நிதியின் வாயிலாக, 18.90 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் அமைக்கப்பட்டது.
புதிய கட்டடத்தின் கட்டுமான பணிகளுக்காக, முகப்பில் இருந்த சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. கட்டுமான பணிகள் முடிந்து, கட்டடம் மாணவர்களின் பயன்பாட்டிற்கு வந்து, ஓராண்டு ஆன நிலையில், இதுவரை உடைக்கப்பட்ட சுற்றுச்சுவர் புதுப்பிக்கப்படாமல் இருக்கிறது.
சாலையோர வளைவு பகுதியில் பள்ளி இருப்பதால், மாணவர்கள் விளையாடும்போது தவறுதலாக சாலைக்கு வரும் நிலையில் அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும், முகப்பு சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், கால்நடைகளின் இருப்பிடமாகவும் மாறுகிறது.
எனவே, பள்ளியின் முகப்பு சுற்றுச்சுவரை சீரமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.