/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டியால் விபத்து அச்சம்
/
10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டியால் விபத்து அச்சம்
10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டியால் விபத்து அச்சம்
10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டியால் விபத்து அச்சம்
ADDED : ஏப் 25, 2024 01:30 AM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது கொண்டஞ்சேரி ஊராட்சி. இங்கு, தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் கொருக்கம்பேடு செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.
30,000 லிட்டர்
இச்சாலையில் உள்ள திரிபுரசுந்தரி நகரில், 20 ஆண்டுகளுக்கு முன் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.
இந்த குடிநீரை கூவம், கொண்டஞ்சேரி பழையகாலனி பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த குடிநீர் தொட்டி, 2012 - 13ம் ஆண்டு ஊரக கட்டடங்கள் பராமரிப்பு திட்டத்தின் கீழ், 45,000 ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. அதன்பின், 10 ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை.
இதனால், தொட்டியின் குழாய் பகுதியில் ஆங்காங்கே சேதமடைந்து, குடிநீர் வீணாகி வருவதோடு, தொட்டியை சுற்றி வீணாகும் குடிநீர் தேங்கி நிற்பதால் பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை இல்லை
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

