/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மெதுாரில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
/
மெதுாரில் நிழற்குடை அமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 25, 2024 01:21 AM

பொன்னேரி:பொன்னேரி - பழவேற்காடு வழித்தடத்தில் மெதுார் கிராமம் அமைந்துள்ளது. தேவம்பட்டு, கோளூர், புதுகுப்பம், பெரியமாங்கோடு, சின்னமாங்கோடு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கிராமவாசிகள் வங்கி சேவைகளுக்காக, மெதுாரில் உள்ள இந்தியன் வங்கிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்கள் வங்கி பரிவர்த்தனை பணிகளை முடித்து விட்டு, பேருந்திற்காக மெதுார் பஜார் பகுதியில் உள்ள குளத்தின் அருகில் காத்திருக்கின்றனர்.
இப்பகுதியில் நிழற்குடை இல்லாததால், பயணியர் பெரும் தவிப்பிற்கு ஆளாகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அங்குள்ள மரங்களின் நிழல்களிலும், கடைகளின் ஓரங்களிலும் தஞ்சம் அடைகின்றனர். மேலும், மழைக்காலங்களில் கூடுதல் சிரமங்களுக்கு ஆளாகினறனர்.
எனவே, மெதுார் பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

