/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரோப்கார் வளாக சாலையில் வாகனங்களால் நெரிசல்
/
ரோப்கார் வளாக சாலையில் வாகனங்களால் நெரிசல்
ADDED : ஏப் 08, 2024 07:19 AM

சோளிங்கர் : ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில். இந்த மலைக்கோவிலுக்கு, 1,305 படிகள் கொண்ட மலைப்பாதை உள்ளது. படி வழியாக மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய வயது முதிர்ந்தவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.
பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு, பக்தர்கள் பங்களிப்புடன் கடந்த மாதம் 8ம் தேதி ரோப் கார் வசதி ஏற்படுத்தப்பட்டது.
பெரிய மலை அடிவாரத்தில் இதற்கான வளாகம் கட்டப்பட்டுள்ளது.
தினசரி ஆயிரம் பக்தர்கள், ரோப் கார் வாயிலாக மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் ரோப் கார் வளாகத்திற்கு செல்லும் சாலையில் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால், இந்த வழியாக நடந்து செல்லும் பக்தர்கள் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
ரோப் கார் வளாகத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சாலை ஓரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.

