/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நிதி ஒதுக்கியாச்சு... பணி என்னாச்சு? ஓராண்டாக கிடப்பில் கால்வாய் பணி
/
நிதி ஒதுக்கியாச்சு... பணி என்னாச்சு? ஓராண்டாக கிடப்பில் கால்வாய் பணி
நிதி ஒதுக்கியாச்சு... பணி என்னாச்சு? ஓராண்டாக கிடப்பில் கால்வாய் பணி
நிதி ஒதுக்கியாச்சு... பணி என்னாச்சு? ஓராண்டாக கிடப்பில் கால்வாய் பணி
ADDED : செப் 12, 2024 02:27 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தாயுமான் தெருவில், மழைநீர் செல்வதற்காக, 25 ஆண்டுகளுக்கு முன் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கால்வாய் பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
தொடர் வாகன போக்குவரத்து காரணமாக, வாகனங்களின் அதிர்வால் கால்வாய் ஆங்காங்கே சேதம் அடைந்தன.
கால்வாயில் குப்பை கழிவுகளும் குவிந்ததால், மழைக்காலங்களில் மழைநீர் சீராக செல்ல வழியின்றி தேங்கியது.
கடந்தாண்டு மழையின்போதும், மழைநீர் செல்ல வழியில்லாமல், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
இந்த கால்வாயை சீரமைக்க கடந்தாண்டு நகராட்சி பொது நிதியில், 15.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கி ஓராண்டு ஆகியும், தற்போது வரை கால்வாய் சீரமைக்கப்படாமல் உள்ளது.
ஒரு மாதத்திற்கு முன், கால்வாய் மீது இருந்த மூடிகள் அனைத்தும் உடைத்து எடுக்கப்பட்டன. தொடர்ந்து, அங்கு எந்த பணிகளும் நடைபெறவில்லை.
தற்போது கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. கால்வாயை ஒட்டி அமைந்திருக்கும் கடை மற்றும் வீடுகளில் உள்ளவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.
கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், வீடுகளுக்கு சென்று வரும் குடியிருப்புவாசிகள், கால்வாயை தாண்டும்போது தடுமாற்றம் அடைகின்றனர். இதன் காரணமாக, வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இந்த பகுதியில் 'டாஸ்மாக்' கடை உள்ளது. இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் இந்த கால்வாயின் அருகில் அமர்ந்து மது அருந்துகின்றனர். போதையில் திறந்த நிலையில் உள்ள கால்வாயில் விழுந்து அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, நகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு, மழைநீர் கால்வாய் பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

